மதுரையில் ஜிஎஸ்டி துணை ஆணையராக பணியாற்றியவர் சரவணக்குமார். ஐஆர்எஸ் அதிகாரி. இவர் மீது லஞ்ச புகார்கள் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சரவணக்குமார் மற்றும் 2 ஜிஎஸ்டி சூப்பிரெண்டுகள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பேரில் துணை ஆணையர் சரவணக்குமார் மற்றும் 2 சூப்பிரரெண்டுகள் கைது செய்யப்பட்டனர். திருவிடைமருதூரில் உள்ள சரவணக்குமார் வீட்டில் சோதனை நடத்த மதுரை சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததால் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில பரபரப்பு ஏற்பட்டுள்ளது.