திருச்சியை சேர்ந்த டிரைவர் மணி என்பவர் திருச்சியில் இருந்து 40 கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் ஏற்றி கொண்டு ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் சென்ற மினி லாரி , ஜெயங்கொண்டத்தில் 10 சிலிண்டர் இறக்க வாகனத்தை நிறுத்தியபோது ஏற்ப்பட்ட திடீர் சத்தம் மற்றும் கசிவு ஏற்பட்டு புகைச்சல் வெளியாகி புகை மூட்டத்தால் பகுதி முழுவதும் புகைச்சலாக காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது. ஒரு சிலிண்டர் விலை 27 கிலோ எடை கொண்டது.40 சிலிண்டரில் அடிப்பகுதியில் இருந்த ஒரு சிலிண்டர் எதிர்பாராத விதமாக திடீரென
ஓப்பனாகியதால் அனைத்து கார்பன் டை ஆக்சைடு அதிலிருந்து வெளியானது. கிட்டத்தட்ட சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த புகையானது வெளியானது. இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டனர். சிலிண்டர் முழுவதும் லீக் முடிந்து பின்னர் லோடு இறக்கப்பட்டு மீண்டும் கும்பகோணம் சென்றது.சிலிண்டர் புகை மூட்டத்தால் வேறு ஏதும் அசம்பாவிதம் சம்பவங்கள் நடந்து விடுமோ என பகுதி மக்கள் அச்சத்தில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.