சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா கடுமையாக பரவி வருகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி திருச்சி விமான நிலையத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் 27ம்தேதி இரவு வரையிலான 4 நாட்களில் 35 விமானங்கள் திருச்சி வந்து உள்ளது. இதில்5159 பயணிகள் திருச்சி வந்தனர். அவர்களில்127 பேருக்கு ரேண்டமாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஆனால் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹாங்காங்கில் இருந்து 2 பேரும், தென் கொரியாவில் இருந்து ஒருவரும் திருச்சி வந்தனர். அவர்களுக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டதில் 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.