சீனா உள்பட பல்வேறு நாடுகளில் பிஎப் 7 என்ற வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.இந்த தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க தமிழக தீவிர நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் மருத்துவத்துறைக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கொரோனா வார்டுகள் தயார் நிலையில் இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியது.
அதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா நோயாளிகளுக்கான வார்டு தயார் படுத்தப்பட்டு ள்ளது. இங்கு செய்யப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பு மருந்துகள், கொரோனா டெஸ்ட், நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அனைத்தும் தயாராக இருக்கிறதா என டீன் பூவதியிடம் கேட்டறிந்தார். அப்போது ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராமுவும் உடனிருந்தார்.