சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், டிசம்பர் 26 அன்று தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் இருந்து வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியான நிலையில், அவர் தலை மறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரை தேடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர் எங்கே மறைந்திருக்கிறார். அவர் மூலம் மேலும் பலருக்க கொரோனா பரவியதா என்ற அச்சத்தில் அதிகாரிகள் உள்ளனர்.
