Skip to content

இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தினசரி பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் அதிகளவிலான பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் 1,573 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு,டில்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மத்திய சுகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கயில் ஒரு நாள் பாதிப்பு 3016 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,509- ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!