மிக்ஜம் புயல் காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 2 நாட்கள் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு மழை ஓய்ந்த பிறகும் சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இன்னும் குடியிருப்பு பகுதிகளில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம், மடிப்பாக்கம், மேடவாக்கம் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். இவர்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு இன்று காலை ராணுவ ஹெலிகாப்டர்களில் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. பால் பாக்கெட், பிஸ்கட், பிரட் போன்றவை போடப்பட்டது. அவற்றை மக்கள் ஆர்வத்துடன் எடுத்து சென்றனர்.
இது தவிர படகுகள் மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிக்கு சென்ற கப்பல்படை வீரர்கள் வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர்.