அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்தகாரர் பிரபாகரன் வீட்டில் இருந்து ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடப்பட்டிருந்தது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் புகார் அளித்தார் புகாரின் பெரில் போலீசார் சிசிடிவி பதிவை ஆய்வு செய்து இதில் தொடர்புடைய திருச்சி இபி பகுதியை சேர்ந்த ஐயப்பன், தினேஷ்குமார் , வசந்தன், கோபி, ஆகியோரை கைது செய்து ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் வாயர்கள் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
