டில்லியில் வரும் 16ம் தேதி ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் செயல்முறை குறித்த விளக்க கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பியது. அதிமுக அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த பதவி தற்போது அதிமுகவில் இல்லை என கூறி கடிதத்தை எடப்பாடி அணியினர் திருப்பி அனுப்பி விட்டனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் மீண்டும் அதிமுக அலுவலகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பியது. அதில் ஒருங்ணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே கடிதம் அனுப்படப்டு உள்ளது. இதனால் எடப்பாடி அணியினருக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அணியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.