நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் தமாகா, ஐஜேகே, புதிய நீதி கட்சி, ஜான்பாண்டியன் கட்சி என பல கட்சிகள் சேர்ந்துள்ளன. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்திடவும், 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய தலைவர் நட்டா அனுமதியுடன் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா .