திருச்சி மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அவர்கள் சாலைகளில் நின்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியினை செய்து வருகிறார்கள்.
கோடை வெயிலையும் பொருட்படுத்தாது ஒரே இடத்தில் நின்று பணி செய்யும் காவலர்களுக்கு கோடை வெயிலுக்கு இதமாக குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது. இந்த பணியை நேற்று திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனர் சத்யப்பிரியா தொடங்கி வைத்தார். குளிர்பானங்கள் , மோர் ஆகியவை அவர்களுக்கு மே மாதம் வரை வழங்கப்படும்.