சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. அதே போல ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலையும் மாத முதல் நாளிலேயே உயர்வை சந்தித்து வருகிறது. எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது.
இந்த நிலையில், இன்று வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1,959.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.