குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தற்போது ஹீரோவாக Mr. Zoo Keeper என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார்.
இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஜே. சுரேஷ் என்பவர் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், இந்த படம் குறித்தும் தான் ஹீரோவாக நடிப்பது குறித்தும் புகழ் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த திரைப்படத்தின் கதையை கேட்டவுடனே எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. படத்தில் எமோஷனலான காட்சிகளில் நடித்துள்ளது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.
இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். ஆனால், எமோஷனலாக ஒரு காட்சியில் அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்றால் அது எப்படி இருக்கும் என்பதை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்த Mr. Zoo Keeper படத்தில் அந்த மாதிரி காட்சிகள் நிறையவே இருந்தது.
படத்தில் வரும் புலி நிஜமானது அதனுடன் நடிக்கும்போது சற்று பயமாக இருந்தது. ஒரு வழியாக படத்தில் நடித்து இருக்கிறேன். ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து அறிமுகம் ஆவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் சற்று எமோஷனலாக புகழ் பேசியுள்ளார். மேலும், இந்த Mr. Zoo Keeper படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.