Skip to content
Home » பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு…. சீமான் மீது திருச்சி உட்பட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு….

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு…. சீமான் மீது திருச்சி உட்பட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு….

  • by Authour

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், சீமான் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.க., தபெதிக, விசிகவினர் அளித்த புகார்களின் அடிப்படையில், திருச்சி-மணப்பாறை கடலூர், தென்காசி, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல், கரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவொருபுறம் இருக்க சீமானை கண்டித்து சோஷியல் மீடியாவில் சிலர் ஒருமையில் வசைபாடி வருகின்றனர். சமீபத்தில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான் ” தாய்மொழி தமிழை சனியன், காட்டுமிராண்டி மொழி என கூறியவர் பெரியார். திருக்குறளை மலம் என்று கூறியவர் பெரியார்.

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார்தான் எல்லாம் செய்தார் என்று சொன்னால் அது எப்படி?அம்பேத்கர், பெரியாரை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்? எனவே, அம்பேத்கரையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது என்பது முட்டாள்தனம்.”என்று சீமான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..