தமிழக முழுவதும் வரும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே கோவை குற்றாலம் அருவிக்கு வழக்கத்தைவிட நீர் அதிகமாக ஆர்ப்பரித்து செல்வதாலும், இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதாலும் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்பட்டு நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகள் அமைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.