புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில்
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா
கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேரணி பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மாநகராட்சியை அடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்
சே.கி.குணசேகரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.