தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே ஆச்சாம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் தமிழ்ச்செல்வி. கடந்த 2011 ஆகஸ்ட் 30ம் தேதி இரவு தந்தையும், மகளும் கீரனூரிலிருந்து செங்கிப்பட்டிக்கு அரசு பஸ்சில் ஏறினர். குன்னாண்டார்கோயில் அருகே சென்றபோது பஸ் பழுதாகி நின்றுவிட்டது. ஆனால் பயணிகளை அனுப்ப அவர்கள் மாற்று ஏற்பாடு செய்யவில்லை.இது குறித்து டிரைவர், கண்டக்டரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவரை அவமானப்படுத்தும் விதமாகவும், அலட்சியமாகவும் பதிலளித்தனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட தந்தையும், மகளும், பைக்கில் லிப்ட் கேட்டு ஊருக்கு வந்து சேர்ந்தனர். இது குறித்து புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளரிடம் புகார் அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மாணிக்கம் தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ராஜகோபால் மற்றும் உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் மாணிக்கம் மற்றும் அவரது மகளுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட டிரைவர் மதியழகன், கண்டக்டர் சுப்பையா மற்றும் புதுகை அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் ஆகிய 3 பேரும், ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடாக 45 நாட்களுக்குள் தர வேண்டும். தாமதமானால் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தந்தை மற்றும் மகளை அலட்சியப்படுத்திய பஸ் டிரைவர் -கண்டக்டருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்..
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/ரிப்பேர்-அரசு-பஸ்-930x620.jpg)