Skip to content

டிச.29ல் அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு…. கோவையில் நடக்கிறது

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கோவை மண்டல மாநாடு வரும் டிசம்பர் மாதம் 29 ம் தேதி கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விவாஹா மகால் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்,  கோவை உக்கடம் பகுதியில் உள்ள தாஜ் டவர் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார்  இதில் கலந்து கொண்டு பேசினார்.

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கொங்கு மண்டல தலைவர் ஜி.எம்.முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இதில் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருப்பூர் நீலகிரி கோவை உள்ளிட்ட

மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டமைப்பின் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

கூட்டத்தில், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவரும்,
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து மாநாட்டு பொறுப்பாளர்களிடம் ஆலோசணை நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  பொன்குமார் கூறியதாவது: இந்த மாநாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பல்வேறு பிரச்சனைகள் குறித்து   முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்று அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது விரைவில் அந்த திட்டங்கள் எளிமையாக்கப்படும் .

குறிப்பாக,எல்லா தொழிலாளர்களுக்கும் வீட்டு வசதி திட்டத்தை விரிவு படுத்த வேண்டும், ஒவ்வொரு வாரியத்திற்கும் நிரந்தர நிதியாதாரம் உருவாக்க வேண்டும் என தொழிலாளர்கள் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. விரைவில் தொழிலாளர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வரும்  என நம்புகிறேன்.

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்ற மாநாடாக நடைபெற உள்ள இதில் 5000 தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குரு நாகலிங்கம், பொருளாளர் ஆறுமுகம் துணைத் தலைவர் ராம வெங்கடேஷ் மற்றும் பாலகிருஷ்ணன்,நாகராஜ், கோவை மாவட்ட கூட்டமைப்பு தலைவர் சந்திரமோகன் செயலாளர் பர்வேஸ் திருப்பூர் மாவட்ட தலைவர் மணிவாசகம் செயலாளர் துரை, நீலகிரி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் ரிஷால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!