மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வீரப்பன். இவர் மயிலாடுதுறையிலிருந்து வீட்டுக்கு ஹோண்டா இருசக்கர வாகனத்தில் சென்றபோது கள்ளிக்காடு என்ற இடத்தில் அவரது வாகனம் திடீரென புகையத் தொடங்கியது. வீரப்பன் வாகனத்தை போட்டுவிட்டு தள்ளி சென்றார். சில வினாடிகளில் வண்டி தீப்பிடித்து முழுவதுமாக எரிந்துவிட்டது. பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்த நிலையில் அதற்குள் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை அருகே கட்டிட தொழிலாளியின் பைக் திடீரென எரிந்து நாசம்…
- by Authour
