அரியலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திக் என்பவர் கடந்த 26 ஆம் தேதி சிலுவைச்சேரி கிராமத்தில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியிடம் விசாரணை செய்தார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி தன்னை கற்பழித்ததாகவும் தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திக் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் இதே சிறுவன் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கற்பமடைந்து ஆண் குழந்தைக்கு தாயாக உள்ளார். ஒன்றை வயதில் கைக்குழந்தை உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளியில் வந்த சிறுவன் மீண்டும் சிறுமியுடன் ஏற்பட்ட தொடர்பில் சிறுமி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமியை இரண்டு குழந்தைக்கு தாயாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..