தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடியில் சமுதாய வளைகாப்பு நடந்தது. மாநில சுற்றுச்சூழல்,மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கவிதா ராமு தலைமைவகித்தார். கழக மாநிலவிவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன்,திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே பி கே டி. தங்கமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.