Skip to content
Home » தொடர் தோல்வி.. கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

தொடர் தோல்வி.. கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின்னர், அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தது பெரும் அதிர்ச்சியையும், ரசிகர்களிடையே விமர்சனத்தையும் எழுப்பியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை இந்திய அணி இழந்திருக்க, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பையும் இழந்துவிட்டது. அணியின் வெற்றி சதவீதம் இப்படி இருக்கும் நிலையில், கேப்டன் ரோகித், பயிற்சியாளர் கம்பீர் இடையே மோதல், கருத்து முரண்பாடு இருப்பதாகவும் பேசப்படுகிறது. அணியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து, பி.சி.சி.ஐ.,நிர்வாகிகள், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இனி போட்டிகளின் போது வீரர்கள் மனைவி, தோழி மற்றும் குடும்பத்தினரை உடன் அழைத்து வருவதற்கு தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களில்  45 நாட்களை கடந்து இருக்கிறது என்றால் மனைவி, குடும்பத்துடன் அந்த வீரர் 14 நாட்கள் மட்டுமே தங்கிக் கொள்ளலாம். அதே தருணத்தில் குறுகிய கால கிரிக்கெட் தொடர் என்றால் வெறும் 7 நாட்கள் மட்டுமே தங்க அனுமதி தரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தொடருக்காக செல்லும் போது ஒன்றாகவே பயணிக்க வேண்டும், அணி வீரர்கள் முன்னரே சென்ற பின்னர், தனியாக வந்து அணியில் இணைந்துக் கொள்ளக்கூடாது என்ற முடிவையும் பி.சி.சி.ஐ., எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..