குளிர்காலத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க, திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே வௌியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.. திருச்சி – ஸ்ரீ கங்கா நகர் ஹம்சபர் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22498) திருச்சியில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்படும் ரயிலில் ஜன. 10- ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிர்சாதன (ஏ.சி)பெட்டி இணைக்கப்படுகிறது. மறுமார்கத்தில் ஸ்ரீ கங்கா நகரிலிருந்து பகல்ம 1.55 புறப்படும் ஸ்ரீ கங்காநகர் – திருச்சி ஹம்சபர் அதிவிரைவு ரயிலில் (வண்டி எண்: 22497) ஜன 6-ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிர்சாதன (ஏ.சி) பெட்டியுடன் இயங்கும். இதேபோல் திருச்சியில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் திருச்சி – ஜோத்பூர் ஹம்சபர் அதிவிரைவு ரயிலில் (வண்டி எண்: 20482) ஜன 4 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், ஜோத்பூரிலிருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் ஜோத்பூர் – திருச்சி ஹம்சபர் அதிவிரைவு ரயிலில் (வண்டி எண்: 20481) ஜன. 1 ஆம் தேதி தொடங்கி 29- ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு 2- ஆம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியுடன் இயக்கப்படுகிறது. என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.