தமிழ்நாடு முழுவதும் இன்று ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன் இன்று காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆர் வி ஜே சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர்கள் ஆசைத்தம்பி,அருணாசலம்,
ஊடகபிரிவுமகேந்திரன்.வசந்த்,சின்னசாமி காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். அனைவரும் கவர்னரை கண்டித்து முழக்கமிட்டனர்.