திருச்சி இ.பி .ரோடு சத்தியமூர்த்தி நகரில் காங்கிரஸ் (கலைப்பிரிவு) மலைக்கோட்டை கோட்ட தலைவர் ராஜீவ் காந்தி தலைமையில் மகளிர் காங்கிரஸ் அஞ்சு முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காதல் காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்குரைஞர் எம் சரவணன் கலந்துகொண்டு
பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல், கரும்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் மலைக்கோட்டை முரளி ஜீவா நகர் மாரிமுத்து சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபு ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் ரபிக் வார்டு தலைவர் சம்சுதீன் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் கிருபாகரன் வழக்கறிஞர் சிவகாமி சுகன்யா சண்முகம் கோகுல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை சிறப்பித்தனர்.