தமிழகத்தில் டிஜிபியாக பணியாற்றியவர் பிரஜ் கிஷோர் ரவி. இவர் தீயணபை்பு த்துறை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அவர் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் 2024 மக்களவை தேர்தலில் தனது சொந்த மாநிலமான பீகாரில் இருந்து போட்டியிடுவார் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன் காங்கிரசில் இணைகிறார்.