காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், . டில்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். . மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும், செல்வம் தலைமையில் ஒரு குழுவும் வேணுகோபாலை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இரு தரப்பினரும் ஒரு கோஷ்டி மீது இன்னொரு கோஷ்டி மாறி மாறி குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே வந்தபோது மயூரா ஜெயக்குமாருக்கும், செல்வத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வார்த்தை போர் உச்சத்திற்கு சென்றது. பீப் ஒலி எழுப்பும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தி வசைபாடினர். அந்த வீடியோ தற்பொழுது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகின்றது.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடம் இருதரப்பிலும் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.