மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் 31 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். அவர்கள் அனைவரும் நேர்காணலுக்கு அண்ணா அறிவாலயம் சென்றிருந்தனர். அனைவரையும் ஒன்றாக அமர வைத்து முதல்வர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி உள்ளனர்.
20 நிமிடம் நடைபெற்ற நேர்காணலின்போது முதல்வர் ஸ்டாலின், மயிலாடுதுறையை காங்கிரஸ் கட்சி கேட்சிகறது என்று கூறினாராம். இதனால் நேர்காணலுக்கு சென்ற திமுகவினர் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பின்னர் அவர்களை முதல்வர் அனுப்பி வைத்தாராம். அடுத்தமுறை பார்ப்போம், அனைத்து தொகுதிகளிலும் நாம் நிற்பதாக கருதி வேலை செய்யுங்கள் என்று முதல்வர் கூறினாராம்.
அப்போது தஞ்சை மாவட்டதிமுக பொறுப்பாளர் எழுந்து, 48 ஆண்டுகள்கழித்து 2019ல்தான் திமுக மயிலாடுதுறையை கைப்பற்றியுள்ளது, மீண்டும் அதை இழக்கக்கூடாது, ஏற்கனவே மயிலாடுதுறை சட்டமன்றம் காங்கிரஸ் கையில் உள்ளது, இதை கொடுக்கவேண்டாம் மயிலாடுதுறையை திமுகவிற்கு ஒதுக்குங்கள் என கேட்டுள்ளார்.
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பலர் விருப்பமனு கொடுத்துள்ளனர். டெல்லி தலைமை யாரை கை காட்டுகிறதோ அவருக்குதான் இந்த தொகுதியில் சீட்டு. மேலிடத்தால் மணிசங்கர் அய்யர் தொடர்ந்து முன்னிலையில் இருந்த நிலை மாறி இந்த முறை ராகுல் காந்திக்கு அருகில் இருந்துகொண்டு ஐ.டி. தொழில்நுட்பத்தி விவகாரங்களை கவனிக்கும் சென்னையை சேர்ந்தவரான பிரவின் சக்கரவர்த்திஅ ய்யங்கார் மயிலாடுதுறை தொகுதியை பெறுவதில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்பு என காங்கிரசார் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
அதிமுக தரப்பில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தவர்களை கட்சிப்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைத்து நேர்காணல் நடத்தி உள்ளார். பாபநாசம் முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பன் என்கிற துரை சண்முகம் மயிலாடுதுறை தொகுதியில் நிறுத்த எடப்பாடி விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது, ஐயப்பன் தஞ்சை வடக்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளராகவும் இருக்கிறார்.
ஆனால் ஐயப்பனுக்கு சட்டமன்ற தொகுதியில் நிற்பதற்கே ஆசை என தெரிகிறது, துரைக்கண்ணு வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் என்றும் அந்தசமூகத்திற்கு அதிமுக ஆட்சியில் 10.5 சதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளதால் அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை அதிமுக உருவாக்கியது என் என்பதால் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என எடப்பாடி நம்புகிறாராம்.