இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி, சிதம்பரம் ஆகியோர் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளனர். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன், பிராந்திய மாநில கட்சிகள் வைத்துள்ள கூட்டணியில், ஒவ்வொரு மாநிலத்திலும் உங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழும்புகிறது. தற்போது வெளியாகி உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் எங்களது இந்தியாவின் பிரதமர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்.
விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வாக்குறுதிகள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின்
வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சீர் செய்யும் நடவடிக்கைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசுப்பணியில் பெண்கள் இட ஒதுக்கீடு புரட்சிகரமான திட்டமாகும். இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்துவது விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உயர்த்தும் நல்ல திட்டம்.
நீட் தேர்வில் மாநில அரசின் முடிவிற்கே விடுவது நம்பிக்கையளிக்கிறது. கல்வி உள்ளிட்ட பல பொதுப் பட்டியலில் உள்ளவற்றை மாநில பட்டியலுக்கு மாற்றுவது மாநில மக்களின் உணர்வுகளை மதிப்பதாக உள்ளது.
அக்னி பாத் திட்டம் ரத்து வாக்குறுதியை வரவேற்கிறேன். சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்குவது நல்ல திட்டம்.
இத்திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.
ஜனநாயகத்தை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி அளித்துள்ள வாக்குறுதிகள் இத்தேர்தல் அறிக்கை இடம்பெற்றுள்ளது. இந்தியக் கூட்டணிக்கு இத்தேர்தல் அறிக்கை வலுச்சேர்க்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வரவேற்பு உள்ளது மணமகிழ்ச்சி அளிப்பதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.