தமிழ்நாடு கவர்னர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழ்நாடு என அழைக்கலாம் என்று கருத்தை முன்வைத்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதில் இருந்து பின் வாங்கினார். சட்டமன்றத்தில் உரையாற்ற வந்த கவர்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவரின் இந்த போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் நடததி வருகிறது.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றம் முன் இன்று காலை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், கவுன்சிலர் ரெக்ஸ், சிவாஜி சண்முகம், வில்ஸ் முத்துக்குமார், உறந்தை செல்வம், ராஜா டேனியல் ராய் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் ஆளுநர் ரவியின் போக்கை கண்டித்து முழக்கமிட்டனர்.