தமிழகம் முழுவதும் இன்று தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிராத்திக்கிறேன்” என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.