முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், வருணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான சித்தராமையா இன்று 11-50 மணி அளவில் தமது சொந்த ஊரான சித்தராமன உண்டி கிராமத்தில் வாக்குச்சாவடி 86 ல் வாக்களித்தார். இதில் விசேஷம் என்னவென்றால் சித்தராமையாவுக்கு அவரது வலது கை காண்பிக்கும் விரலுக்கு மை போடப்பட்டுள்ளது, இதேபோல் அந்த கிராமத்தில் நாலைந்து பேருக்கு வலது கை காண்பிக்கும் விரலுக்கு மை போடப்பட்டுள்ளது இதற்கு காரணம் என்ன தெரியவில்லை. இவருடன் இவரது மகன் யத்தியந்தரா சித்தராமையாவும், ஓட்டு போட்டார்.
சித்தராமையா கிராமத்திற்கு வந்த உடனே கிராமத்தில் இருக்கும் சித்தராமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கும்பிட்டு பூஜை செலுத்தினார், அதற்குப் பிறகு சென்று ஓட்டு போட்டார். ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்த உடனே கிராம மக்கள் அவரை சூழ்ந்து வெற்றி முழக்கங்களை எழுப்பினர். வாக்களித்த பின் சித்தராமையா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மாநிலத்தில் இந்த தடவை காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி அடைகிறது ஆட்சி பிடிக்கிறது அதில் நோ டவுட், பிரதமர் மோடி, அமித்ஷா எத்தனை தடவை ரோடு ஷோ நடத்தினாலும் அவருக்கு எந்த பிரயோஜனமும் ஆகாது, பாஜக ஆட்சியின் நடைமுறைகளை பற்றி மக்கள் நொந்து போயிருக்கிறார்கள் இந்த தடவை ஓட்டு போடுவதன் மூலமாக தகுந்த பாடம் கற்றுக் கொடுப்பார்கள். பாஜக அதிக இடங்களை பெற்று ஆட்சிக்கு வருகிறது என்று விசுவாசத்துடன் எல்லாரும் இருக்கிறார்கள் ஆனால் அவர்களது ஆசை நிறைவேறாது காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்து ஆட்சிக்கு வரும் என்றார்.