இந்திய தொழில் அதிபர் அதானிதனது நிறுவனங்களில் பல முறைகேடுகள் செய்தும், போலி நிறுவன முகவரிகள் மூலமும், தன்னை உலகின் 3வது பெரிய பணக்காரா் என அறிவித்து உள்ளார் என அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இந்த நிலையில் அதானியின் சொத்து மதிப்பு மளமளவென சரிந்தது. தற்போது அவர் உலகின் 35வது பணக்காரராக சரிந்து விட்டார்.
அதானி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் மத்திய அரசு அவருக்கு பல உதவிகளை செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. அதானியின் தில்லுமுல்லுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 13ம் தேதி இந்தியாவில் அனைத்து மாநில தலைநகரங்களிலும், காங்கிரசார் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். பேரணி கவர்னர் மாளிகை நோக்கி செல்லவும், பொதுகூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.