Skip to content
Home » எச். ராஜா மீது வழக்கு பதிவு கோரி….. தஞ்சை போலீசில் காங். புகார்

எச். ராஜா மீது வழக்கு பதிவு கோரி….. தஞ்சை போலீசில் காங். புகார்

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அச்சுறுத்தும் வகையில் பேசி வரும் தமிழ்நாடு பாஜக பொறுப்புக் குழு தலைவர் எச். ராஜாவின் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சேதுபாவாசத்திரம் வடக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சேதுபாவாசத்திரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இப்ராகிம்ஷா தலைமையில், நிர்வாகிகள் ஞானசேகரன், வீரையன், பாலு உள்ளிட்ட  பலர்,  சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு பாஜக பொறுப்புக் குழு தலைவர் எச். ராஜா ராகுல் காந்தியை தேசவிரோதி என்றும் தேசத்துரோகி என்றும் அவமதிப்பாக பேசிவருகிறார்.

ராகுல் காந்தி மீதான தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய எச். ராஜா மீது  உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.அந்த மனுவை போலீசார் பெற்றுக்கொண்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!