Skip to content
Home » அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?

அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?

  • by Authour

கன்னியாகுமரி எம்பியாக இருந்த வசந்தகுமார் மறைவிற்கு பின் நடந்த இடைத்தேர்தலில் தனக்கு எம்.பி சீட்டு கிடைக்கும் என விஜயதாரணி எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த விஜயதாரணி க்கு எம்எல்ஏ சீட்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிருப்தியில் இருந்த விஜயதாரணி தற்போதுநடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் விஜயதாரணியைத் தொடர்ந்து திருச்சி  காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர் பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் சார்பாக திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை அதே தொகுதியைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வந்தார் திருநாவுக்கரசர். ஆனால், அவருக்கு உட்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு  அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருநாவுகரசருக்கு சீட்டு தரவேண்டாம் என ஆய்வு கூட்டத்தில் திருச்சி  திமுகவினர் விமர்சனம் செய்தனர். மேலும் திருச்சி தொகுதியை மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவுக்கு கொடுக்க திமுக உறுதி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படியாக சொல்லப்படுகிறது. இப்படியாக அடுத்தடுத்த தகவல்களால் அப்செட் ஆகியுள்ள திருநாவுகரசர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவிற்கு செல்லலாம் என தகவல்கள் உலா வர ஆரம்பித்துள்ளன..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *