திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் கடந்த 4-ந்தேதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, ஜெயக்குமாருக்கு கடன் கொடுக்க வேண்டிய விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று வெளியானது. இந்த நிலையில், இவர் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு நபர்களிடம் கடன் பெற்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரசு ஒப்பந்தம், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்தங்கள் எடுத்து பணியாற்றியுள்ளார். கட்சியில் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் பல நபர்கள் இவரிடம் கொடுத்த கடனை திருப்பிகேட்டதாக கூறப்படுகிறது.ஆகையால் இவர் யார் யாருக்க பணம் கொடுக்க வேண்டும் என்ற பட்டியல் அவர் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் ஜெயக்குமாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் எழுதிய நபர்களிடம் நடத்திய விசாரணையில், ஜெயக்குமார்தான் தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். வேண்டுமென வேண்டுமென்றே திட்டமிட்டு இது போன்று எழுதி வைத்திருக்கிறார் என பலர் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.20 கோடி வரை கடன்.. காங் மாவட்ட தலைவர் கொலையில் புதிய தகவல்..
- by Authour