திருநெல்வேலி கிழக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கரைசுத்துபுதூர் உவரியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் தனது வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு கடிதத்தில் காங்கிரஸ் பிரமுகர்களான எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் மாநிலத்தலைவர் கே.வி. தங்கபாலு உள்ளிட்டோர் பண விஷயத்தில் தனக்கு நெருக்கடிகொடுத்தாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதேபோல் சில ஒய்வு பெற்ற அதிகாரிகள் குறித்தும் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். மற்றொரு கடிதத்தில் யாரையும் பழிவாங்க வேண்டாம். போலீசார் பார்த்துக்கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பாதி எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரில் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருடைய வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும் கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த தடயங்களை வைத்து பார்க்கும் போது ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் இன்று மதியம் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது.. ஜெயக்குமார் தன்சிங்கின் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. இவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயக்குமார் இறப்பு விவகாரத்தில் கட்சி ரீதியாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் அரசியல் பின்புலத்துடன் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் என்றார்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிந்து கிடந்த ஜெயக்குமார்.. ..
- by Authour