Skip to content
Home » திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்

திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்

  • by Authour

அம்பேத்கர் குறித்து அவமரியாதையாக  கருத்து தெரிவித்த மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்தும்,ராகுல் காந்தி மீது வழக்கு போட்டதை கண்டித்தும் திருச்சி நீதிமன்றம் முன் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திர குமார்,காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் லட்சுமணன், மாநில துணைத்தலைவர் சுப.சோமு,திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் வக்கீல் சரவண சுந்தர்,மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள்,
காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகையா , வனஜா சுகன்யா, சிவகாமி கோகுல் பெரியசாமி ஆறுமுகம் பஷீர் விக்னேஷ், நோபல் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் பஜார் மைதீன், வக்கீல் குமார் , அண்ணா சிலை விக்டர், மாரியப்பன், கள்ளத்தெரு குமார் ,ஆட்டோ பாலு, தர்கா சேக், சண்முகம். ராஜீவ் காந்தி உள்பட ஏராளமானவர்கள்  கலந்து கொண்டனர்.