சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவரும், கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளருமான ராதிகா கேரா, கட்சியில் இருந்து நேற்று விலகினார். கட்சித் தலைவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், ராதிகா கேரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரையின்போது, கட்சியின் சத்தீஷ்கார் ஊடக பிரிவு தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா எனக்கு மது கொடுத்து அருந்தும்படி கூறினார். அத்துடன், அவர் மற்றும் 5-6 நிர்வாகிகள் போதையில் என் அறையின் கதவை தட்டினர். அவர்களின் அத்துமீறல் சச்சின் பைலட் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் இந்து எதிர்ப்பு சித்தாந்தத்தை நான் கடந்த 30-ம் தேதி மாலை மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் சுஷில் ஆனந்த் சுக்லாவிடம் பேசச் சென்றபோது அவர் என்னை திட்டினார். என்னை அறையில் வைத்து பூட்டியதுடன், அவரும் மற்ற இரண்டு மாநில செய்தித் தொடர்பாளர்களும் என்னிடம் அவமரியாதையாக நடந்துகொண்டனர். நான் கத்தி கூச்சலிட்டேன். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. மேலிடத்தில் புகார் கொடுத்தபோதும், யாரும் செவிசாய்க்கவில்லை இவ்வாறு பரபரப்பான புகார்களை ராதிகா கேரா கூறியுள்ளார். .