திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் வைத்திநாதன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு வந்த ரெக்ஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி
கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் மத்திய அரசை கண்டிக்கும் பதாகை ஏந்தி வந்தனர். ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கவுன்சிலர்கள் இந்த கருப்பு சட்டை போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டம் தொடங்குதவதற்கு முன் அவர்கள் மாநகராட்சி வளாகத்தில் கோஷங்கள் எழுப்பிவிட்டு கூட்டத்திற்கு சென்றனர்.