சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. மேலும், எந்தவித கூட்டணிகளிலும் இணையாதது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கையில், கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் சில நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதால் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தியபோது, அதே கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திடீரென உள்ளே நுழைந்து திடீரென தடுத்து சீமானுக்கு எதிராக பேசக்கூடாது என கூறி, தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, “சீமானுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் தேடிச் சென்று அடிப்பேன்” எனவும் அவர்களை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, தலைமை சரியில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என நாதக விலிருந்து மேலும் ஒரு மாநில பெண் நிர்வாகி விலககியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.