Skip to content

ஓய்வு கண்டக்டரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.5 லட்சத்தை பறித்துசென்ற 5 பேர் கைது…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுந்தரம் நகரை சேர்ந்தவர் துரையன் ( 70). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது நண்பர். சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சித் திக்(40). இவர், துரையனிடம் தனக்கு தெரிந்த நபர் ரூ.5 லட்சத்திற்கு 2 ஆயி ரம்ரூபாய் நோட்டுகளை வைத்து உள் ளார். 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்று கூறினார். இதை நம்பிய துரையன், தனதுவங்கி கணக்கில்இருந்த ரூ.3 லட்சத்தை எடுத் துக்கொண்டு சித்திக்கை சந்திக்க மரப் பேட்டை பகுதிக்கு சென்றார். அங்கு அவர்கள் பேசிக்கொண்டு இருந்த போது, தங்களை போலீசார் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் காரில் வந்தது.அந்தகும்பல் சித்திக்,துரையன் ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றனர். தாராபுரம் ரோட்டில் சென்றபோது, காரை நிறுத்தி ரூ.3 லட்சத்தை பறித்ததோடு சித்திக்,துரையனை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு அந்த கும்பல் சென்றது. இதுகுறித்து சித்திக், துரையன் ஆகி போலீசில் புகார் கொடுக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் சித்திக், துரையனிடம் 500 ரூபாய் நோட் டுகளாக ரூ.2 லட்சம் மட்டும் எடுத்து வாருங்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட் டுகளாக ரூ.5 லட்சத்தை வாங்கி விட லாம் என்று கூறினார். இதை நம்பி மீண்டும் வடக்கிபாளையம் பிரிவில் வைத்து துரையன் ரூ.2 லட்சத்தைசித்திக்கிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த அதே கும்பல் போலீஸ் என்று கூறி பணத்தை மீண்டும் பறித்து சென்றனர். இதனால் சந்தேகமடைந்த துரை யன்,பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சித்திக்கை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர்.விசாரணையில் ஆனைமலையை சேர்ந்தஹபீப் ரகுமான் (44),கண்ணன் (37), கோவை குனியமுத்தூரை சேர்ந்த சதக்கத்துல்லா (44), ஈச்சனாரியை சேர்ந்த ஆரோக்கிய தாஸ் (52) ஆகி யோ ருடன் சேர்ந்து சித்திக் திட்ட மிட்டு துரையனிடம் பணத்தை பறித் தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்,போலீஸ் என கூறி மோசடி செய்த சம்பவம் பொள்ளாச்சியின் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!