அரியலூர் மாவட்ம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில், இந்திய திருநாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட, சிறந்த பொருளாதார மேதை, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவினை முன்னிட்டு, இந்தியா கூட்டணி கட்சிகள் இரங்கல் கூட்டம், அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், விசிக மாவட்ட செயலாளர் இரா.கதிரவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இராமநாதன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிவேல், மதிமுக மாவட்ட பொருளாளர் புகழேந்தி ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள். இதில் தோழமை கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி தோழர்கள் கலந்துகொண்டனர்.