முரசொலி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் அக்கா கணவருமான முரசொலி செல்வம் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்
ராஜேஷ்குமார், அனைத்துக்கட்சி தலைவர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், திரையுலகினர், வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள், அஞ்சலி செலுத்தினர்.
இன்று சபாநாயகர் அப்பாவு, தவெக தலைவர் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசகேர் , நடிகர்கள் விஜயகுமார், பார்த்திபன், ராஜேஷ், அருண் விஜய், உள்ளிட்ட திரையுலகினர் ,பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், , இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளன, ரவிக்குமாாப் எம்.பி. ஜவாஹிருல்லா, உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.