புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 நாள் தங்கி காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட நிபந்தனை விதிக்கபப்டடுள்ளது. இனி இதுபோன்ற அவதூறான செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்ப மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கவும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.