அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இதில் தற்போது வரை 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து நிலையில் மாற்று சான்றிதழ் வாங்கி சென்று மீண்டும் படிப்பை தொடராமல் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி படிப்பை முடிக்காமலும் இடையில் நின்ற மாணவ மாணவிகள் என அனைவரின் வீடுகளுக்கும் சென்று மாணவர்கள் படிப்பை தொடராமல் உள்ளதற்க்கான
காரணங்களை கேட்டறிந்தனர். மேலும் அவர்கள் படிப்பை தொடர விழிப்புணர்வு வழங்கினர்.
இந்நிகழ்ச்சி வட்டார கல்வி அலுவலர் சாந்தி ராணி தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி வராமல் பூ கடையில் இருந்த மாணவனிடம் மீண்டும் பள்ளியை தொடர விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து மாணவன் பள்ளிக்கு வருவதாக கூறினார்.
மேலும் சுத்தமல்லி கடைவீதியில் அரிவாள் கோடாரி விற்பனை செய்த வெளி மாநில இளைஞர்களிடம் விசாரணை செய்து குறைந்த வயதுடய நீங்கள் கல்வியை தொடர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.