பட்டுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமை யில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனபால், காவலர்கள் அருள்குமார், ஐயப்பன், பாஸ்கர் மற்றும் பார்த்திபன் ஆகியோர் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சிவக்கொல்லை, லெட்சத்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த பட்டுக்கோட்டை நைனா குளம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (39), கடலூர், திட்டக்குடி, கோனூர் பகுதியை சேர்ந்த பாலு ( 37) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. அதில் லட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயசீலியின் வீட்டில் திருடியது, சூரப்பள்ளம் செல்லும் வழியில் உள்ள சன் சீல் என்ற இரும்பு கடையில் திருடியது, துவரங்குறிச்சி தனியார் பள்ளியில் லேப்டாப் மற்றும் அலுவலகப் பொருட்களை திருடி சென்றதும், கரம்பயத்தில் 2 வீட்டில் திருட்டு சம்பவத்தை நடத்தியது உள்பட பல்வேறு தொடர் திருட்டு சம்பவங்களை இவர்கள் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.