நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கபட்டுள்ளது
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிர்பார்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யாத நிலையில் தாமதமாக துவங்கி உள்ளது.
இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக அதிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ரெட் அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு கடும் குளிரும் நிலவி வருகிறது.
ஆடி மாதம் பிறந்துள்ளதால் கனத்த மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது இதனால் பலஇடங்களில் சாலைகளில் மரங்கள் விழுகின்றன அவை உடனுக்குடன் அகற்ற படுகின்றன
இந்த நிலையில் ஊட்டி முள்ளிக்கொரை சாலையில் அடுத்து அடுத்து விழுந்த 5 மரங்கள் சாலையில் விழுந்தன அதிஷ்டவசமாக நூல்யிழையில் வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்