கடந்த 3 தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவையாறு வட்டாரத்தில் அறுவடை நிலையில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் அரசாபகரன் ஆய்வு செய்தார். திருச்சோற்றத்துறை, வீரசிங்கம்பேட்டை, ஆவிக்கரை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த முன்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் அறுவடை நிலையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மழையினால் சாய்ந்துள்ளன. இதை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அரசாபகரன், கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் ஆகியோருடன் விவசாயிகளின் வயல்களை ஆய்வு செய்ததுடன் விவசாயிகளிடம் கூறும் போது… பருவம் தவறிய கன மழையினால் சேதமடையும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வருவாய் துறை, வேளாண் துறை இணைந்து கணக்கெடுப்பு மேற்க் கொண்டு, உடன் அரசுக்கு அறிக்கை வழங்கும். நெல் கொள்முதல் நிலையங்களில் 20 சதவீத ஈரப்பதத்திற்கு கொள்முதல் செய்திட வேண்டி அரசுக்கு வேண்டுகோள் திருவையாறு வைக்கப் படும் என்றார்.