தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இன்று காலை முதல் மழை தூறலாக பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தஞ்சையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து குளிர்ந்த காற்று வீசியது. நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி, புதுப்பட்டி, பூதலூர் பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் இரவும் மழை தொடர்ந்து பெய்தது.
இதனால் இந்த பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் என பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் தூறல் மழையாக பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது